ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு காலையில் ரயில்வேயில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.