தமிழகத்தில் கோடை காலமாக இருந்தாலும் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் மேலும் அந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன
தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மே 18 முதல் 20 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் ஒடுக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva