சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

Prasanth Karthick
வெள்ளி, 21 ஜூன் 2024 (11:14 IST)

இன்று தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து நேற்று சட்டமன்ற கூட்டத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வந்த நிலையில் அதிமுகவினர் கள்ளச்சாராய விவகாரத்தை சுட்டிக்காட்டி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சபாநாயகர் சொல்லியும் அவர்கள் கேட்காததால் குண்டுக்கட்டாக தூக்கி அவர்களை வெளியேற்றியுள்ளனர். சட்டமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, தான் பேசுவதற்கு நேரம் வழங்குவதாகவும், பொறுமையாக இருக்கும்படி சொல்லியும் கேட்காததால் வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments