தமிழக சட்டசபை இன்று கூட இருக்கும் நிலையில் கள்ளச்சாராய பலி குறித்த விவகாரத்தை எழுப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
தமிழக சட்டசபை இன்று கூடும் நிலையில் இன்றைய முதல் நாளில் மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு நாளை முதல் மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் சட்டசபை கூட்டம் காலை மாலை என இரண்டு வேலைகள் நடைபெறும் என்றும் முதல் இரண்டு நாட்கள் மட்டும் 10 மணிக்கு தொடங்கும் என்றும் மற்ற நாட்கள் 9.30 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய சாவு குறித்து புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் சட்டமன்றம் பரபரப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.