Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா வரும் வரை தாக்கு பிடிக்குமா? டிடிவி தலையில் துண்டு போட்ட கட்சியினர்!

சசிகலா வரும் வரை தாக்கு பிடிக்குமா? டிடிவி தலையில் துண்டு போட்ட கட்சியினர்!
, வெள்ளி, 28 ஜூன் 2019 (15:04 IST)
ஜெயிலுக்கு சென்றுள்ள சசிகலா திரும்பி வரும் வரை அமமுக என்னும் கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் அதிமுகவை மீட்பேன் என கட்சி துவங்கியவர் டிடிவி தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். 
 
இதில் டிடிவி தினகரன் வலது மற்றும் இடது கரங்களாக திகழ்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து கட்சியில் இருந்து பலர் விலகியுள்ளனர். 
webdunia
குறிப்பாக இன்று தங்க தமிழ்ச்செல்வன் விலகியதோடு, வடசென்னை வடக்கு மாவட்ட அமமுகவினர் பலர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்துள்ளனர். அதேபோல் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் கட்சியில் இருந்து விலகி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 
ஆனால், தினகரன் இது குறித்து வருத்தப்படமாட்டார் என்றே தெரிகிறது, காரணம் இதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகினால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். அதுவும் ஒரு வகையில் கட்சிக்கு நல்லதே என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடும் காரில் தொங்கியபடி சென்ற ஊழியர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!