இந்தியாவால் தேடப்படும் பொருளாதார குற்றவாளியான மெகுல் சோக்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டிகுவா நாட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது டொமினிக்கன் நாட்டில் சிக்கிக் கொண்டர். அவர் அந்நாட்டு சிறையில் தற்போது இருக்கும் நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது
மெகுல் சோக்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி ஆண்டிகுவா நாட்டுக்கு மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அவர் ஜாமீன் தொகை கட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து மெகுல் சோக்சி இன்னும் ஒரு சில நாட்களில் ஆண்டிகுவா நாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தநிலையில் நிகழ்ச்சியை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது