சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
கடந்த வாரம் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறாஇ காரணமாக ஒரு சில நாட்கள் தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் இன்று பூரண தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே என்றும் பொதுமக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் கோவாக்சின் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாது என்று கூறியுள்ள மாநகராட்சி கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.