Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொத்து வரி உயர்வை கண்டித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம்

vijaybashkar
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:59 IST)
முதலில் ஆர்பாட்டம் தொடர்ந்து அதிரடி ஆய்வு ஆதாரத்தோடு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் .
 
ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு தற்போது போடப்பட்ட சாலை என்று கணக்கு காட்டி மக்களின் வரிப்பணத்தினை கோடிக்கணக்கில் கொள்ளை மந்திரி செந்தில்பாலாஜி பெயரில் எம்.சி.எஸ்.சங்கர் என்பவரது வண்டவாளத்தினை தண்டவாளத்தில் ஏற்றினார் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
 
மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நிர்வாகத்திறன் அற்ற காரணத்தில் விரைவில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜிநாமா செய்வதாகவும் அறிவிப்பு
 
கரூர் மாவட்ட அதிமுக சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து கொண்டு சென்ற கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் டூ ஈசநத்தம் சாலை தற்போது போடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.

மேலும், இந்த சாலைகள் தற்போது தரமாக உள்ளதை சுட்டிக்காட்டினார். அதே போல், வால்காட்டுப்புதூர், சுக்காலியூர் டூ ஈசநத்தம் டூ கரூர் மூன்றுவழிசாலைகள் வரையும், அதே போல், புகளூர் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செல்லும் சாலை, மண்மங்கலம் டூ நன்னியூர் புதூர் ஆகிய சாலைகளும், வேலாயுதம்பாளையம் பகுதியில் சில சாலைகளும் சேர்த்து ரூ 4 கோடி அளவில் மொத்தமாக ரூ 10 கோடி அளவில், தார்சாலைகள் புதிதாக போடப்பட்டதாக கணக்கு காட்டி ஏற்கனவே இருந்த தரம் வாய்ந்த சாலைகளை கணக்கு காட்டி அதற்கான தொகையையும் பெற்றுள்ளதாக புகார் தெரிவித்ததாக கூறி, ஆங்காங்கே அந்த சாலைகளை ஆதரப்பூர்வமாக காட்டி, ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு தான் இந்த புதிய சாலை என்ற பெயர் வைத்து அதற்கான பணத்தினை பெற்றுள்ளனர் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் -ம் புகார் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கொடுக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்த வித பதிலும் தெரியவில்லை என்றும் கூறி அவரது புகாரினை கொடுத்தார்.

இந்த சம்பவத்தின் போது., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றியப்பெருந்தலைவர்கள் என்று ஏராளமானோர் உடனிருந்தனர். பின்னர் புகாரை கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்., கரூர் மாவட்ட அளவில் திமுக ஆட்சி அமைத்த 10 மாத காலத்தில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, ஏற்கனவே போடப்பட்ட தார்சாலைகளை மீண்டும் போடப்பட்டதாக கூறி ரூ 10 கோடிக்கு மேல் அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளனர். கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின் அலுவலகமாக மாறி உள்ளது. ஓய்வு பெற்ற இரண்டு நபர்களை அந்த அலுவலகத்தில் வைத்து கொண்டு தற்போது ஆங்காங்கே டெண்டர்களில் குறிக்கிட்டு வருகின்றார். எந்த ஒரு டெண்டராக இருந்தாலும் சரி, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்திடம் பாஸ் செய்தால் மட்டும் தான் செல்லுமாம், அதிகாரிகளுக்கும் இதே நிலை தான், ஆகவே தனி ஒரு நபர் கரூர் மாவட்டத்தினையே ஆட்சி செய்து வருகின்றார். இது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் தெரிந்து தான் நடந்து வருகின்றது, கரூர் மாவட்ட்த்தினை பொறுத்தவரை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் செயல்பட்டு வருகின்றார். இதே போல், குட்கா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கொங்கு மெஸ் மணி என்பவர் கிராவல் மண்களில் ராஜ்ஜியம் செய்து வருகின்றார். என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதே போல், அதிமுக கட்சி கவுன்சிலர்கள் திமுக விற்கு மாறவில்லை என்றால் காவல்துறையை வைத்து கஞ்சா கேஸ், குட்கா கேஸ் ஆகியவைகளை போடுவதாகவும், அவர்களை திமுக விற்கு கட்டாயமாக மாற்றப்பட்டு சேர்க்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் ஒர்க்கிற்கு நிதி ஒதுக்காமால் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆனால் தற்போது போடபட்ட ஒர்க்கிற்கு பண்ட் பாஸ் ஆகி வருகின்றது. ஆகவே, ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்தும் எந்த வித பயனுமில்லை, ஆகவே, தலைமையின் அனுமதி பெற்று, கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் கூண்டோடு ராஜினாநாமா செய்வதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை ஆகவே, மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீராங்கணைகளை வாழ்த்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள்.