அதிமுகவை ஜாதி கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகராஜ் குற்றம் சாட்டி உள்ளார். 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அதிமுக தொண்டர் மட்டுமல்ல பொதுமக்களும் எடப்பாடி பழனிக்கு எதிராக உள்ளனர் என்றும் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடு தான் இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
	 
	அதிமுகவை ஜாதி கட்சியாக எடப்பாடி மாற்றிவிட்டார் என்றும் எடப்பாடி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும் என்றும் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார். 
	 
	முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை வந்தபோது விமான நிலையத்தில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என சிலர் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது