அதிமுகவில் திடீரென இணைந்த ஈரோடு கிழக்கு வேட்பாளர்.. ஓபிஎஸ் அதிர்ச்சி
ஓபிஎஸ் ஆதாரவாளர் ஒருவர் இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து ஓபிஎஸ் அணி கிட்டத்தட்ட கூடாரம் காலி ஆகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என்று இருந்தாலும் தற்போது எடப்பாடி பழனிசாமி அணி உண்மையான அதிமுக என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் வாபஸ் பெற்றார் இந்த நிலையில் செந்தில் முருகன் திடீரென அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்
இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அமைப்பு செயலாளர் பி.செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் நிர்வாகிகள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
ஓபிஎஸ் தரப்பிலிருந்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு சென்று கொண்டிருப்பதை அடுத்து ஓபிஎஸ் கூடாரம் காலியாகி வருவதாக கூறப்படுகிறது.