பாயாசம் நன்றாக இல்லை என மணமகள் வீட்டார் கூறிய நிலையில் அவர்களை மணமகன் வீட்டார் அடித்து துரத்திய நிலையில் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி அழகே இன்று காலை திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தின் இறுதியில் பாயாசம் பரிமாறப்பட்ட நிலையில் பாயாசம் சரியில்லை என பெண் வீட்டார் கூறியதாகவும் இதனை அடுத்து பெண் வீட்டாரை தகாத வார்த்தையில் மாப்பிள்ளை வீட்டார் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
முதலில் வாய் சண்டையாக நடந்த இந்த சண்டை அதன் பிறகு அடிதடி ஆக மாறியது என்பதும் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்து மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மண்டப வாசலில் மணமக்களின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர்களிடம் இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது