Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரியம்மன் ஆலய திருத்தேர் வீதி உலா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

மாரியம்மன் ஆலய  திருத்தேர் வீதி உலா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

J.Durai

கோயம்புத்தூர் , திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா பொடையூர்  கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் 13 தேதி  காப்பு  கட்டுதல் நிகழ்வும், அன்று இரவு சாமி வீதியுலா நடைபெற்றது.
 
9 நாள் திருவிழா  மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம், ஒவ்வொரு நாளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.
 
இதில் சாமிக்கு பொரிகடலை,  தேங்காய், பழம், மாவிளக்கு, சுண்டல்,கூழு என படையல் இட்டு சாமி வீதி உலா வரும் போது படைப்பது வழக்கம்.
வைகாசி 20-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வானவேடிக்கை மற்றும்  தாரை தப்பட்டை ,கேரளா மேளதாளத்தோடு  சாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 
 
மாலை 3 மணி அளவில் திருத்தேர் கோயில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள்   முன்னிலையில்  திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு பொதுமக்கள் அரகரா,கோவிந்தா ,ஓம் சக்தி  கோசமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் வாரிய செயற்குழு உறுப்பினர் கே என் டி சங்கர்,ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதா சரவணன், 
கே என் டி அருள்,ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாவட்ட பிரதிநிதி ராமதாஸ், வடக்கு ஒன்றிய பொருளாளர் பழனிவேல், இளைஞர் அணி சூர்யா  கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
ஆண்களும் பெண்களும் சாமி வந்து நடனம் ஆடினர். ஏராளமான கிராம பொதுமக்கள் அனைவரும் திருத்தேரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் ராமநத்தம் போலீசார் பொதுமக்களுக்கு  பாதுகாப்பு அளித்தனர்,மின்வாரிய துறையினர் தேர் செல்லும் இடமெல்லாம் மின் ஓயர்களை துண்டித்து  தேர் சென்ற பிறகு  மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீன் உயர்களை இணைத்தனர் அனைத்து வீதிகளையும் சுற்றி வந்து திருத்தேர் நிலைக்கு திரும்பியது ஆர்வத்துடன்  தேர் திருவிழா நடைபெற்றது. 
 
மா பொடையூர்  சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஆரவாரத்துடன் தேரை இழுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி ஒரு நிலைமை வந்தா அமைச்சரவையே எங்களுக்கு தேவையில்ல?? – துரை வைகோ உறுதி!