Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட மாரத்தான் போட்டி!

marathon
, சனி, 19 நவம்பர் 2022 (18:06 IST)
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட ‘சென்னை ரன்ஸ்’ மாரத்தான் நிகழ்வை நடத்தும் மெட்ராஸ் ரவுண்டு டேபிள்
 

●        2022 டிசம்பர் 11 அன்று நடைபெறவுள்ள 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ, மற்றும் 21 கிமீ ஓட்டங்களை உள்ளடக்கிய இம்மாரத்தான் நிகழ்வில் 5,000 – 7500 நபர்களது பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை, 19 நவம்பர், 2022: 65 ஆண்டுகளுக்கும் அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டுவரும் இந்தியாவின் முதல் ரவுண்டு டேபிள் அமைப்பு என்ற பெருமையினைக் கொண்டிருக்கும் மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 (MRT 1), இம்மாநகரில் டிசம்பர் 11-ம் தேதியன்று அறச்செயல் நோக்கத்திற்காக சென்னை ரன்ஸ் என்ற பெயரில் ஒரு மாரத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது. குழந்தை பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வை உருவாக்குதல், நோய்ப்பாதிப்பை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்ற குறிக்கோள்களுக்காக இயங்கும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனமான மகேஷ் மெமோரியல் டிரஸ்ட்-ன் ஒத்துழைப்போடு குழந்தைகளுக்கான புற்றுநோய் நேர்வுகளுக்கு சிகிச்சையளிக்க நிதி திரட்டும் நோக்கத்துடன் இந்த மாரத்தான் நிகழ்வு நடத்தப்படுகிறது.

கண் கண்ணாடிகள் மற்றும் கண்ணாடிகளுக்கான லென்ஸ்கள் துறையில் இயங்கிவரும் சர்வதேச அளவில் முதன்மை வகிக்கும் தொழில்நுட்ப பெருநிறுவனமான ஸைஸ் (Ziess), இந்தியாவில் கண் மருத்துவமனைகளின் முன்னணி வலையமைப்பு குழுமங்களுள் ஒன்றான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, வசந்த் & கோ, கல்யாண் ஜூவல்லர்ஸ், கோஷ் சொகுசு ரிசார்ட்ஸ், கேகேஎன் எனர்ஜி, அப்போலோ ஹெல்த்கேர், ஐடி ஃப்ரெஷ் ஃபுட் மற்றும் கோகோ கோலா இந்தியா ஆகிய நிறுவனங்களின் ஆதரவோடு அறச்செயல்பாட்டுக்கான இம்மாரத்தான் நிகழ்வு நடைபெறுகிறது.

சென்னை ரன்ஸ் என்ற பெயரில் முதல் பதிப்பாக நடைபெறும் இம்மாரத்தான் நிகழ்வு, பெசன்ட் நகரிலுள்ள ஆல்காட் நினைவு உயர்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும். பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கக்கூடியவாறு 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ வகையினங்களின் கீழ் இம்மாரத்தான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. திறனிழப்பு இருப்பினும் சேம்பியன்களாக திகழும் மாற்றுத்திறனாளிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஓடலாம். இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு உயர் தரத்திலான டி-ஷர்ட் மற்றும் வெற்றிகரமாக ஓட்டத்தை முடித்ததற்கான பதக்கமும் வழங்கப்படும்.

5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ தூரத்துடன் ஓட்ட நேரம் பதிவுசெய்யப்படுகிற வகையினங்களில் பங்கேற்கும் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு மாரத்தான் ரேஸில் பங்கேற்பவர்கள் அணியும் கழுத்தாடையில் பதியம் செய்யப்பட்டுள்ள ஓட்ட நேரத்தை அளவிடும் ஒரு டைமிங் சிப் – ம் வழங்கப்படும். ஓட்டத்தை நிறைவுசெய்யும்போது நேரத்தை குறிப்பிட்டிருக்கிற ஒரு சான்றிதழையும் அவர்கள் பெறுவார்கள். 3 கிமீ தூரத்தைக் கொண்டிருக்கும் வகையினம் என்பது, ஓடுகின்ற நேரம் அளவிடப்படாத ஒரு நிகழ்வாக இருக்கும். 2022 நவம்பர் 25ம் தேதி வரை www.chennairuns.com என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் பொது மக்கள் இதில் பங்கேற்பதற்கு பதிவு செய்யலாம்.

மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1-ன் (MRT1), தலைவர், டாக்டர். அஸ்வின் அகர்வால் இந்நிகழ்வு குறித்து பேசுகையில் கூறியதாவது: ”உலகெங்கிலும் குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் ஏற்படும் உயிரிழப்பில் முன்னணி காரணமாக புற்றுநோய் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.

இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 50,000 நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு நடைபெறும்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களது வாழ்க்கை கதைகள், நடத்திய போராட்டங்கள் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர்வாழ்வதற்கான செயல்உத்திகள் பற்றி பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் உடல்நலத்தை சிறப்பாக பேணுவதற்கு, உத்வேகமளிப்பதற்கு இந்த பகிர்வு உதவும். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் அனைத்து அன்பளிப்புகளும், பங்களிப்புகளும், புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது, சிகிச்சைக்கான செலவுகளை எதிர்கொள்வது மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கான சாத்தியமுள்ள நபர்களுக்கு தொடக்க நிலை பரிசோதனையை மேற்கொள்வது ஆகிய குறிக்கோள்களுக்கான செயல்பாடுகளுக்கு செலவிடப்படும்.”

மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1-ன் (MRT1), நிதி திரட்டல் குழுவின் அமைப்பாளர் திரு. சிராக் குப்தா பேசுகையில், “தனது உறுப்பினர்களின் தோழமை உணர்வின் வழியாக சமூக சேவையை ஆற்றுவதில் MRT1 நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. சமூக சேவையின் மூலம் இச்சமுதாயத்தில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற எமது குறிக்கோளைச் சார்ந்து, கடந்த 65 ஆண்டுகளுக்கும் அதிகமாக பல்வேறு அறக்கொடை அமைப்புகள் மற்றும் மக்கள் நலவாழ்வுக்கான நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தோடு நாங்கள் நிதித்திரட்டலை தொடர்ந்து செய்துவருகிறோம். இந்த ஆண்டு எமது வருடாந்திர அறக்கொடை நிதித்திரட்டல் நிகழ்வில் ஒரு அங்கமாக மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் என்ற சமூக சேவை அமைப்போடு நாங்கள் ஒருங்கிணைந்திருக்கிறோம்.

இந்த டிரஸ்ட், அடையாரில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் கூட்டாண்மையோடு, குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை வார்டு ஒன்றை நிர்வகித்து வருகிறது. இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது, புற்றுநோய் மீது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அதிகரிக்கவும் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு, குறிப்பாக பொருளாதார ரீதியில் ஏழ்மையான பின்னணியை கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை இன்னும் விரிவுபடுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

13 ஆண்டுகளாக புற்றுநோயை எதிர்த்துப் போராடி 2002 அக்டோபர் மாதத்தில் உயிரிழந்தவரும் மற்றும் மக்களால் அதிகம் மதிக்கப்பட்ட இசையமைப்பாளருமான திரு. மகேஷ் மகாதேவன் அவர்களது நினைவை போற்றும் வகையில் இந்த டிரஸ்ட் நிறுவப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் “மகேஷ் நினைவு குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையத்தை” உருவாக்கும் நோக்கத்திற்காக டிரஸ்ட்டின் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளது சிகிச்சைக்கான இந்த வார்டில், விளையாடுவதற்கான பகுதி, உணவருந்தும் அறை, படுக்கை வசதிகள் கொண்ட பொது வார்டு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை கருத்தில் கொண்டு இக்கட்டிடத்தின் வண்ணமும், உட்புற அலங்காரமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை பெறவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடையவும், நம்பிக்கையும், உற்சாகமும் கலந்த சிறப்பான சூழலை இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். எனினும், குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உலகளவில் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள் உயர்ந்து வருவதாலும், முழுமையான சிகிச்சைக்கான நிதி ஆதரவை வழங்குவதன் மூலம் இக்குழந்தைகளை பாதுகாக்க வசதியற்ற குடும்பத்தினருக்கு உதவி அவர்களது நிதிச் சுமையை குறைப்பதற்காக MRT1 மற்றும் MMT ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் தகவல்