தமிழகத்தில் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,கூலி வேலைக்குச் செல்லும் முதியவர்களின் கை ரேகை சரியாக அந்த மெஷினில் பதிவாவதில்லை என்ப்தால், பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதியவர்களின் கருவிழிப் பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வாங்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறறது.
மேலும், கருவிழி பதிவு செய்யும் திட்டம் முதலில் சென்னையில் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.