நடிகர் விவேக் மரணத்தை தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் இதய கோளாறால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த மன்சூர் அலிகான் முன்னதாக விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பேசி வருவதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள மன்சூர் அலிகான் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.