Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா? மணிசங்கர் ஐயர் போட்டியிட ஆர்வம்..!

Siva
புதன், 6 மார்ச் 2024 (11:36 IST)
மயிலாடுதுறை தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை காங்கிரஸ் கட்சி கேட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் மணிசங்கர் ஐயர் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மயிலாடுதுறை தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக தான் இருந்தது என்பதும் 1967க்கு பின் இந்த தொகுதியில் காங்கிரஸ் 7 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மணிசங்கர் ஐயர் இந்த தொகுதிகள் ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் 2009 ஆம் ஆண்டு மட்டும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை தொகுதியை கேட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் மணிசங்கர் ஐயர் தான் வேட்பாளர் என்று கூறப்படுகிறது

எனவே மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறை தொகுதியில் தலை காட்ட தொடங்கிவிட்டார் என்றும் சமீபத்தில் நடந்த விழாக்களில் கூட அவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் ஐயர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜக யார் யாரை நிறுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments