Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் கட்டாய முகக்கவசம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

Advertiesment
நாளை முதல் கட்டாய முகக்கவசம்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!
, வெள்ளி, 31 மார்ச் 2023 (12:31 IST)
கொரோனாவின் 3ம் அலையின் போது, தமிழ்நாட்டில் உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொற்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து 100 ஐ தாண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதை. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி  தமிழக சுகாதாரத்துறை சார்பில், முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. "கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை(01-04-2023) முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் - பார் மூடப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!