சினிமா பாணியில் பேருந்தில் கட்டாய தாலி கட்டிய இளைஞர் – பெண்ணின் தைரியமான முடிவு !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (09:41 IST)
வேலூர் மாவட்டத்தில் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணிற்கு பேருந்தில் வைத்து கட்டாயத் தாலி கட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தன்னோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனாலும் அதை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளைப் பார்ப்பதை அறிந்து அவரிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடந்த அந்த இளைஞர் நண்பர்களின் முட்டாள்தனமான யோசனையைக் கேட்டு பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார்.

இதனால் கோபத்தில் அந்த பெண் கத்த பஸ்ஸில் இருந்த பயணிகள் அவரை அடித்து வெளுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவது போல தாலி கட்டிவிட்டால் பெண் தன்னையே கல்யாணம் செய்துகொள்வார் என்று நினைத்த இளைஞர் இப்போது காவல்நிலையத்தில் உடகார வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments