Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாலி கட்டுவதற்கு முந்திய நிமிடம் திடீரென நுழைந்த போலீஸ்: திருமண மண்டபத்தில் பரபரப்பு

Advertiesment
தாலி கட்டுவதற்கு முந்திய நிமிடம் திடீரென நுழைந்த போலீஸ்: திருமண மண்டபத்தில் பரபரப்பு
, திங்கள், 9 டிசம்பர் 2019 (22:44 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் என்பவருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென போலீஸ் உள்ளே புகுந்ததால் அந்தத் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்நூல் மாவட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருக்கு அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமணத்திற்கான சடங்குகள் நடந்து ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தபோது தாலி கட்டுவதற்காக மாப்பிள்ளை தயாரானார்
 
அந்த நேரத்தில் திடீரென காவல்துறையினர் நுழைந்து மாப்பிள்ளையை கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மணமகள் வீட்டார் போலீசாரிடம் விளக்கம் கேட்டபோது ’மோகனசுந்தரம் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு ஆறு லட்ச ரூபாய் ரொக்கமும் 60 பவுன் நகையும் வரதட்சணையாக பெற்றுள்ளதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டு மீண்டும் வரதட்சிணை பெறும் நோக்கத்தோடு தற்போது திருமணம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர் 
 
தாலி கட்டும் கடைசி நேரத்தில் திடீரென மாப்பிள்ளை கைது செய்யப்பட்டதால் திருமணம் நின்றுபோனது குறித்து மணமகள் வீட்டார் பெரும் சோகத்தில் இருந்தாலும், ஒரு மோசடி நபரிடமிருந்து தனது மகள் தப்பிவிட்டார் என்ற சந்தோஷமும் மணமகள் வீட்டார் இடையே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் இளம்வயது பிரதமராக பதவி ஏற்க இருக்கும் பெண்: எந்த நாட்டில் தெரியுமா?