Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமி – சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:30 IST)
தனது காதலியோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடையூறாக இருந்த சிறுமியை உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மத்திம வயது பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தன் மகளையும் தாயார் கவனிப்பில் படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் இவரின் தனிமையப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயகுமார் எனும் இளைஞன் அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார்.

நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் உருவாக இருவரும் ஒன்றாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். குழந்தையின் பாட்டி இறந்துவிட வேறுவழியில்லாமல் குழந்தை தாயோடு வாழவேண்டிய  சூழல் உருவானது. இதனால் காதலர்கள் முன்போல சந்தோஷமாக வாழ முடியவில்லை. தங்கள் காதல் வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்த உதயகுமார் சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து அவரைக் கொடுமைப் படுத்தியுள்ளார்.

இதனால் அந்த சிறுமி எந்நேரமும் அழுதுகொண்டிருக்க சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து போலிஸுக்குத் தகவல் சொல்ல, போலிஸார் அங்கு வந்து உதயகுமார் மற்றும் குழந்தையின் தாயாரைக் கைது செய்துள்ளனர். சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் உடல் முழுவதும் சிகரெட்டால் வைக்கப்பட்ட சூடுகளும், காயம் ஆறாமல் இருக்க அதை மரக்குச்சிகளால் கிண்டி விடப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments