Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

Advertiesment
டாஸ்மார்க்

Siva

, வெள்ளி, 13 ஜூன் 2025 (13:58 IST)
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (27 வயது) என்ற நபர், டாஸ்மாக் கடைக்கு உயிரிழந்த சாரை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு வந்துள்ளார். அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி, தனக்கு முதலில் மதுபானம் வழங்க வேண்டும் என்று மிரட்டி வாக்குவாதம் செய்துள்ளார். 
 
அதுமட்டுமின்றி, அங்கு வரிசையில் மது வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களையும் பாம்பைக் காட்டி அச்சுறுத்தினார். இதனை அடுத்து, மதுபானத்தை வாங்கி பாம்பின் வாயில் ஊற்றி முத்தம் கொடுத்து கலாட்டா செய்தார். 
 
மேலும், அந்தப் பகுதியில் சாலை வழியாக சென்றவர்களிடமும் பாம்பை காட்டி பயமுறுத்தினார். இது குறித்த தகவல் காவல்துறைக்கு வந்தவுடன், உடனடியாகக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகசுந்தரத்தை எச்சரித்தனர். 
 
அதன் பின், அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்கு ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத் விமான விபத்து: டாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் உதவி..!