Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த முதியவர் கடைக்கு சென்று பக்கோடா வாங்கினாரா? ஆம்புலன்ஸ் ஊழியருக்கு அதிர்ச்சி!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:19 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்களும் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைநகர் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ள வேளையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

அப்படி பாதிப்பு அதிகமாகியுள்ள மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. அங்கு இதுவரை 824 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு எனும் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட முதியவர் ஒருவரை அழைத்துச் செல்ல அரசு அதிகாரிகள் ஆம்புலன்ஸோடு வந்துள்ளனர்.

அப்போது மருத்துவமனைக்கு செல்ல, தன் உடைமைகளோடு வந்த முதியவர் தன்னுடைய பையை ஆம்புலன்ஸ் அருகே வைத்துவிட்டு அதிகாரிகளை அதை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று பக்கோடா பார்சல் வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவமானது ஆம்புலன்ஸில் வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதியவர் கையில் கையுறையும் முகத்தில் மாஸ்க்கும் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் முதியவரின் அந்த பொறுப்பற்ற செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments