அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க்குகளை அணிந்து செல்கின்றனர். இதனால் தமிழகத்திலும் மாஸ்க் அணியும் பழக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர் மக்கள் நலப் பணிகளுக்காக வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்று மக்களுக்கு முன்னுதாரணமாக் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. ஆனால் அந்த புகைப்படத்தில் உதயகுமார் மாஸ்க்கை கழற்றாமலேயே நிற்கிறார். இதனால் அவர் சும்மா புகைப்படம் எடுப்பதற்காக சாப்பிடுவது போல நிற்கிறார் என்று இணையவாசிகள் அவரைக் கேலி செய்து வருகின்றனர்.