தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உண்டான மன உளைச்சலால் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை வெடிக்க செய்து மனைவி,மகளோடு சேர்ந்து கணவரும் பலியான விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் ராமூர்த்தி. இவருக்கு காஞ்சனா என்கிற மனைவியும், அட்சயா என்கிற 6 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் அந்த பகுதியில் பிஸ்கட், சாக்லெட் ஏஜென்ஸி எடுத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வீட்டிற்கு வாடைகை கொடுக்க கூட பணம் இல்லாமல் ராமமூர்த்தி தவித்து வந்துள்ளார். இதனால், அவருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த சிலிண்டரை படுக்கை அறைக்கு எடுத்து வந்து, அதை திறந்து கேஸ் பரவியதும் அதை பற்ற வைத்துள்ளார் ராமமுர்த்தி. இதனால் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அவரின் மனைவி காஞ்சனா மற்றும் மகள் அட்சயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ராமமூர்த்தி படுகாயமடைந்தார்.
சத்தம் கேட்டு ஒடிவந்த அக்கம் பக்கத்தினர் ராமூர்த்தியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,செல்லும் வழியிலேயே ராமமூர்த்தியின் உயிர் பிரிந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.