Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் 11 பேர் தற்கொலை ; பின்னணியில் ஒரு மந்திரவாதி? : பகீர் தகவல்

Advertiesment
Kada baba
, செவ்வாய், 3 ஜூலை 2018 (14:17 IST)
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு பின்னால் காடா பாபா எனும் மந்திரவாதி சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
 
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட அனைவரும் ஒரே விதமான ஆடையை அணிந்து கொண்டது மட்டுமின்றி அவர்கள் அனைவரின் கை, கண், வாய் ஆகியவை கட்டப்பட்டும் இருந்தது.

 
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழைகள் அல்ல இதற்கு பின்னால் யாரேனும் இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
விசாரணையில், அந்த குடும்பத்திற்கும், காடா பாபா என்கிற மந்திரவாதிக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த குடும்பத்தை அடிக்கடி ஆலமரத்தின் அருகில் அழைத்து சென்று அவர் பூஜை செய்துள்ளார். கடவுள் என்பவர் ஆலமரம் போல் நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும் எனவும் கூறிவந்துள்ளார்.
 
எனவே, அவர்களை மூளைச்சலைவை செய்து அந்த சாமியார்தான் தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியிலும், ஆலமரத்தை வழிபடுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விழுதுகள் போல வீட்டில் அனைவரின் உடலும் தொங்கி கொண்டிருந்ததையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 
இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக  கருதப்படும் மந்திரவாதி காடா பாபா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ஜோடியான ரஜினி ஹீரோயின்