Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்ரஸ் கேட்பது போல பாலியல் சீண்டல்… தொடர் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது!

Advertiesment
அட்ரஸ் கேட்பது போல பாலியல் சீண்டல்… தொடர் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது!
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:18 IST)
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ் தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போல அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 20 வயது பெண் ஒருவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த நபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல பேசியுள்ளார். அந்த பெண் முகவரி பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணின் உடல் மேல் கைவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்து மயங்கியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் சிசிடிவி கேமரா மூலமாக ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட இளைஞரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. தனியாக செல்லும் பெண்களிடம் இதுபோல அட்ரஸ் கேட்பது போல அவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள்: 600 வீடுகள் சேதம்!