Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடுமையான டிராபிக்கில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் – தர்ம அடி வாங்கிய நபர் !

Advertiesment
கடுமையான டிராபிக்கில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் – தர்ம அடி வாங்கிய நபர் !
, வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:23 IST)
சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து அந்த பெண் போலிஸில் ஒப்படைத்துள்ளார்.

சென்னை சாலி  கிராமத்தைச் சேர்ந்த பெண் தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு தனது நண்பருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது அருகில் வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணைத் தொட்டு சீண்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சத்தம் போட்டு அலற மர்மநபர் பைக்கில் வேகமாக தப்பி செல்ல முயன்றுள்ளார்.

ஆனாலும் விடாத அந்த பெண் தன் நண்பரை வேகமாக பைக்கை ஓட்ட சொல்லி அவரைத் துரத்தி எம் எம் டி ஏ காலணி அருகே பிடித்துள்ளார். அவரை அடி வெளுத்து வாங்க அருகில் இருந்த மக்கள் சம்பவத்தைக் கேள்விபட்டு அந்த நபரை போட்டு வெளுத்து வாங்கியுள்ளனர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டு விரைந்த வடபழனி காவலர்கள் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் முரளிகிருஷ்ணன் என்றும் கமாண்டோ தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் எனவும் சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”அவர் மட்டுமல்ல, அதிமுகவில் பலரும் இப்படித்தான்”.. வறுத்தெடுக்கும் ஸ்டாலின்