கள்ளக்குறிச்சி அருகே தங்களது அரிசி ஆலை சொத்து விவகாரத்தில் தலையிட்ட தாய் மாமனை வெட்டிக் கொலை செய்துள்ளார் சர்வேஷ் எனும் நபர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மோரைப்பாதை பகுதியில் வசித்து வருகிறார் சர்வேஷ். அவருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த சொத்து சம்மந்தமாக அவரது தாய்மாமன் திருநாவுக்கரசுவுக்கும் சர்வேஷுக்கும் இடையே முன் பகை இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பகையின் காரணமாக தனது தாய்மாமனை கொலை செய்த சர்வேஷ் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.