போதையில் பெரியப்பாவின் பிணத்தோடு தூங்கிய நபர் – கொலை செய்தது யார் தெரியுமா ?

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:08 IST)
குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தனது பெரியப்பாவைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு அவரது சடலத்தோடே தூங்கியுள்ளார் ஒரு நபர்.

தேனி மாவட்டம் சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தண்ணசாமி. இவரின் தம்பியின் மகன் கனகவேல் ஐய்யப்பன். குடிக்கு அடிமையாக இருந்த கனகவேலை திருத்த எவ்வளவோ முயற்சிகள் எடுத்துள்ள பெத்தண்ணா. ஆனால் கனகவேல் குடியை நிறுத்தவில்லை. இது சம்மந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினமும் வழக்கம்போல கனகவேல் குடித்துவிட்டு வர பெத்தண்ணசாமி அவரைக் கடுமையாக திட்டியுள்ளார். போதையில் இருந்த கனகவேல், உருட்டுக் கட்டையை எடுத்து பெத்தண்ணசாமியைத் தாக்கியுள்ளார். இதில் பெத்தண்ணசாமி மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஆனால் போதையில் அதுகூட தெரியாமல் கனகவேல் படுத்து உறங்கியுள்ளார்.

வழக்கம்போல காலையில் எழுந்து பெரியப்பாவைப் பார்த்தபோதுதான் அவர் இறந்தது தெரிந்துள்ளது. கொலைக்கு தாம்தான் காரணம் என உணர்ந்ததும் நேராக போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments