திருப்பூர் அருகே பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு பீடி பத்தவைத்த நபர் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்தவுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு அவர் பீடி பற்றவைக்கும் போது தீப்பொறி பரவி விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.