நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்து, ஜாமீன் கையெழுத்து போட்ட நபர் ஒருவர், நண்பர் இறந்து விட்டதால் அந்த கடன் தன்னுடைய தலைமையில் விழுந்து விட்ட சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜான் தேவராஜ் என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டார். அந்த நண்பர் திடீரென இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த கடன் ஜான் தேவராஜின் மீது விழுந்தது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனை கட்டி வந்த நிலையில், கடன் தொகை அதிகமாகிக் கொண்டே வந்தது.
இதனால் கடன் தொல்லையால் தவித்த அவர், மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெளியே சென்ற மனைவிக்கு வீடியோ கால் மூலம் பேசி, "நான் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு தூக்கில் தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தனது கணவரை பார்த்து கதறி அழ்ந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, "கடன் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டினார்களா?" என்பதற்காக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.