Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு கேள்விதான்… ஹெச் ராஜாவை அமைதியாக்கிய நபர் – அப்படி என்ன கேட்டார் ?

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (08:31 IST)
திருமா வளவனுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து வீதிக்கு வந்து போராடும் காலம் இது என டிவிட்டரில் தெரிவித்த ஹெச் ராஜாவிடம் நச் சென்று ஒரு கேள்வி கேட்டுள்ளார் டிவிட்டர் வாசி ஒருவர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள் ஆபாசமாக இருப்பதாக கூறியதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என அவர் மீது மோசமான வசைகளை வைத்து வருகின்றனர் பாஜக நிர்வாகிகள்.பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் திருமாவளவனைப் பற்றி ஆபாசமாகப் பேசி வருகிறார். அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்காத பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா திருமாவளவனுக்கு எதிராக இந்துக்களை திசை திருப்பும் வேளைகளை செய்து வருகிறார்.

இது சம்மந்தமாக ஹெச் ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது’ என அறைகூவல் விடுத்துள்ளார்.

அந்த பதிவில் ஹெச் ராஜாவிடம் கேள்வி எழுப்பும் விதமாக சிவக்குமார் எனும் டிவிட்டர்வாசி  ‘ஐயா, நம் இந்து சொந்தம் ஒருவரை சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கன்னத்தில் அடித்துவிட்டார். அவரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும்’ எனக் கூற அவருக்கு எந்த பதிலும் அளிக்காத ராஜா அவரை பிளாக் செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர சமூகவலைதளங்களில் அது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments