Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 வயது சிறுமியைத் திருமணம் செய்த 43 வயது நபர் – அதிரவைக்கும் பின்னணி!

Advertiesment
15 வயது சிறுமியைத் திருமணம் செய்த 43 வயது நபர் – அதிரவைக்கும் பின்னணி!
, சனி, 31 அக்டோபர் 2020 (10:05 IST)
தேனி அருகே 15 வயது சிறுமியை 43 வயது நபர ஆசைவார்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் வலசத்துறையில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி இறந்துவிடவே இரண்டாவது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில் தனது வீட்டருகே வசித்து வரும் 15 வயது சிறுமியிடம் பழக ஆரம்பித்துள்ளார் கிருஷ்ணன். அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரை பழனிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க தேடுதலில் ஈடுபட்ட போலிஸார் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்துக்காக கிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க கஷ்டப்பட்டு வாங்குனா.. கிரெடிட் உங்களுக்கா? – கொந்தளிக்கும் அதிமுக அமைச்சர்கள்!