Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென பிறந்த குழந்தை; பெற்றோருக்கு பயந்து சிறுமி செய்த செயல்! – ரஷ்யாவில் கொடூரம்!

Advertiesment
திடீரென பிறந்த குழந்தை; பெற்றோருக்கு பயந்து சிறுமி செய்த செயல்! – ரஷ்யாவில் கொடூரம்!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:59 IST)
ரஷ்யாவில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் அதை மறைக்க ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு தெரியாமலே கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக அக்கம்பக்கதினருக்கு சந்தேகம் வர அதை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் எடை கூடுவது தற்செயல் என நினைத்து விட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே குழந்தை பெற்றுள்ளார் அந்த சிறுமி. அதை பெற்றோருக்கு தெரியாமல் மறைக்க பிளாஸ்டிக் கவரில் சுற்றி ப்ரீசரில் வைத்துள்ளார். ஆனால் சிறுமிக்கு ரத்தக்கறை ஏற்பட்டுள்ளதை கவனித்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி தனக்கு குழந்தை பிறந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக சென்று ஃப்ரீசரில் இருந்த குழந்தையை மீட்டுள்ளார்கள். ஆனால் அதற்குள் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்து விட்டிருந்துள்ளது. இதை தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆருக்கு பிறகு எடப்பாடியார்தான்! – கடம்பூர் ராஜூ உறுதி