Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானின் தலையை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்தவர் கைது.. யார் அவர்?

Mahendran
வியாழன், 1 மே 2025 (18:10 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலையை வெட்டுவேன் என ஈமெயில் மூலம்  மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த நிலையில் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தான் மிரட்டல் விடுத்தவர் என்றும் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டதால் அதற்கு  முழு பொறுப்பு சீமான் தான், அதன் விளைவு மரணம்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
 
மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் என்ற பெயருடைய அவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தேனி சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
இதனை அடுத்து அவர் அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் இதுபோன்ற வேறு யாருக்காவது அவர் மிரட்டல் விடுத்து உள்ளாரா? என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை கலெக்டரை மாற்ற கோரி விசிக மறியல் போராட்டம்: பெரும் பரபரப்பு..!

நண்பர் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படமெடுத்த நபர்.. அதிரடி கைது...!

போரை இந்தியா தொடங்கட்டும்.. நாங்கள் முடித்து வைக்கிறோம்: பாகிஸ்தான்

மதுரைக்கு வறேன்.. யாரும் என் பின்னாடி வராதீங்க! - நடிகர் விஜய் தொண்டர்களுக்கு கோரிக்கை!

ஊருக்கு பினாயில் வியாபாரம்.. உள்ளுக்குள் பாரின் சரக்கு! பொள்ளாச்சியில் CRPF முன்னாள் வீரர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments