முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை எடுத்து காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் தான் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், அந்த வீட்டிற்கு மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். சமீர் என்ற பெயரில் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ஆர்.டி.எஸ் வெடிகுண்டு என்றும் கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வீடு முழுவதையும் சோதனை செய்து பார்த்ததில் அது வழக்கம்போல் போலி மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும், அதன் பின் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் வெடிகுண்டு பிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.