நள்ளிரவு துவங்கி விடிய விடிய பெய்த மழையினால் கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு துவங்கிய மழை அதிகாலை வ்ரை விடாமல் தொடர்ந்தது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் பெய்த தொடர் மழையால், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தல சயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கங்கை கொண்டான் மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மேற்கூரை விழுந்தது மட்டும் அல்லாமல் தூண்களும் உள்வாங்கியதால் மண்டபம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து அறநிலையத்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
மழையால் இடிந்துள்ள இந்த மண்டபம் மிகவும் பழமையானது. எனவே, விரைவில் மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி விரைவில் புதிய மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.