Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக ஸ்டாலின், திருமாவளவன் அமைதி ஏன்? கமல்ஹாசன் கேள்வி

Advertiesment
முக ஸ்டாலின், திருமாவளவன் அமைதி ஏன்? கமல்ஹாசன் கேள்வி
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (19:28 IST)
இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை என திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கூறிய கருத்துக்கு திருமாவளவன் அமைதியாக இருப்பது ஏன்? என கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதி திராவிட நலப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணல்‌ அம்பேத்கார்‌ பெற்றுத்தந்த உரிமையில்‌ நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம்‌. அவர்‌ ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில்‌ சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்‌ வழிகாட்டியவர்‌. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள்‌ நினைத்தாலும்‌ அதில்‌
கைவைத்திருக்க முடியாது.
 
அப்படியிருக்கையில்‌ சட்டம்‌ கொடுத்த வாய்ப்பை பிச்சை போட்டதாக திமுகவின்‌ அமைப்பு செயலாளர்‌ ஆர்‌ எஸ்‌ பாரதி அந்தக்கால “ஜமீன்‌ தனத்தோடு” ஆணவமாக கருத்துக்கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்‌. தனது கட்சி செயலாளர்‌ கூறிய கருத்து திரு ஸ்டாலின்‌ அவர்களுக்கு மிகசாதாரணமான ஒன்றாக தோன்றியிருப்பது வருந்தத்தக்கது. திரு ஆர்‌ எஸ்‌ பாரதி வருத்தம்‌ தெரிவித்தால்‌ போதுமானது என்று நினைத்தது கண்டனத்திற்குரியது. 
 
இந்த நேரத்தில்‌ திமுகவோடு கூட்டணியில்‌ இருக்கும்‌ விசிக தலைவர்‌ செஞ்சோற்றுக்கடனால்‌ கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. இவர்கள்‌ குணம்‌ எப்படியானது என்பதை “தாழ்த்தப்பட்ட மக்கள்‌” மட்டுமல்ல “தமிழக மக்களே” உணர வேண்டிய நேரம்‌ இது. குறிப்பாக “இடதுசாரிகள்‌” தேர்தல்‌ நேரத்தில்‌ அவர்களுக்கு கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என்றும்‌ நாளை ஆர்‌ எஸ்‌ பாரதி கூறலாம்‌ மாற்றார்‌ தோட்டத்து மல்லிகையும்‌ மணக்கும்‌ என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம்‌ ஆணவத்தில்‌ உச்சியிலிருந்து அழிவின்‌ பள்ளத்தாக்கில்‌ விரைவில்‌ விழும்‌
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்ட வீடியோ ! ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் !