Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மய்யம் விசிலுக்கு சிறந்த செயலி விருது - கமல்ஹாசன் பெருமிதம்

மய்யம் விசிலுக்கு சிறந்த செயலி விருது - கமல்ஹாசன் பெருமிதம்
, சனி, 29 செப்டம்பர் 2018 (17:49 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் செயலிக்கு இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் கிடைத்துள்ளது.

 
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது, விசில் என்கிற செயலியையும் அறிமுகப்படுத்தினார். இதில் மக்கள் தங்கள் புகார்களை தெரிவித்தால், அரசு மற்றும் அதிகாரிகளும் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
 
எனவே, பலரும் அந்த செயலியையும் பலரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்கள் புகார்களை கூறி வருகின்றனர். அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
webdunia

 
இநிலையில், இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் விருதி இந்த மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள கமல்ஹாசன் “இந்திய அளவிலான @MMA_APAC  விருதுகளில், மய்யம் கட்சியின் விசில் செயலி, வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக  “வெள்ளிப் பதக்கமும்”, புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது.
 
ஒரு அரசியல் கட்சியாக இது வரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி,  இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திட காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும்,நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்லட் நாகராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது