14 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையிலிருந்து போடிக்கு மீண்டும் இன்று முதல் ரயில் இயக்கப்படுவதை அடுத்து அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து மதுரை போடி வழித்தடம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மதுரை முதல் தேனி வரை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மதுரை - போடி ரயில் இயக்கப்பட உள்ளது.
இதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது என்பதும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை செய்து பார்த்ததில் வெற்றிகரமாக ரயில் பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் பயணிகளுக்காக மதுரை போடி ரயில் சேவை இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும். அதேபோல் மாலை 5:50 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு 7:50 மணிக்கு மதுரைக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் போடிக்கு ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை சென்று அடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் இந்த ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்றடையும்.