Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்.. 3 பேர் தலைமறைவு..!

Mahendran
வெள்ளி, 4 ஜூலை 2025 (13:49 IST)
மதுரை அருகே 25 வயது வாலிபர் ஒருவர், தான் காதலித்த 20 வயதுப் பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டதோடு, தனது நண்பர்களுக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த தீபன் ராஜ்  என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தனது காதலியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்த தீபன் ராஜ், அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு, தனது நண்பர்களான திருமாறன் மற்றும் மதன் ஆகியோருக்கு போன் செய்து, தான் ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, தீபன் ராஜின் வீட்டுக்கு வந்த திருமாறன் மற்றும் மதன், மூவரும் மாறி மாறி அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய தீபன் ராஜ், திருமாறன், மதன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடுவாரா விஜய்?

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்