சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவது எப்போது என்பது குறித்து திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் இடையே 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வசந்த நகர் வரை சுரங்கம் தோண்டி ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை குறித்து மாநில அரசிடம் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்ததும் பணிகள் தொடங்கும் என்றும் திட்ட இயக்குனர் அர்ஜுனன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒப்புதல் அளித்தது மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் சேவை மதுரையில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.