Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

27 ரயில் நிலையங்களுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்- மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்தக் பேட்டி.

27 ரயில் நிலையங்களுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்- மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்தக் பேட்டி.
, புதன், 28 ஜூன் 2023 (14:17 IST)
மதுரை மெட்ரோ திட்டம் 8500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ளது. அதற்கான திட்ட அறிக்கை ஜூலை 15ஆம் தேதி மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான இடங்களை மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையிலான குழுவினர்  இன்று வடக்கு மாசி வீதி, வடக்கு ஆவணி மூல வீதி, தல்லாகுளம் உள்ளிட்ட பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்லக்கூடிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரோ தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சியின் ஆணையர் பிரவீன் குமார் மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் மற்றும் மெட்ரோ குழுவினர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை வருகின்ற ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்கிறோம் முக்கிய அம்சங்கள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் ஆணையர் பீரவின் குமார் பதவியை உள்ளிட்ட அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினோம். மொத்தமாக 32 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் 5 கிலோமீட்டர் பூமிக்கு அடியிலும் 27 கீ.மீ உயர்மட்ட ரயில் பாதையாகவும் அமைய இருக்கிறது. 
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர் செல்லும் மாசி வீதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத விதத்தில் மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலைய நிறுத்தம்,   மீனாட்சியம்மன் கோயில் ரயில் நிறுத்தம், கோரிப்பாளைய ரயில் நிறுத்தம் என 3 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன.   வைகை ஆற்றின் அடியில் 10 மீட்டர் ஆழத்தில் ரயில் பாதை செல்வதால் பெருமளவு மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றார்.
 
 அதேபோல் மீனாட்சி அம்மன் கோயில் மெட்ரோ நிறுத்தம் வடக்கு மாசி வீதியில் அமைப்பதா, ஆவணி மூல வீதியில் அமைப்ப தா இறுதி முடிவு எடுக்கப்படும். பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ பாதையில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ரயில் நிறுத்தமும் உயர் மட்ட பாதையில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிறுத்தமும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 30ம் தேதி 600 - 700 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுகின்றனர்; மாற்று ஏற்பாடு என்ன?