புடிச்சி உள்ள போடுங்க சார்! தப்பியோடும் கொரோனா நோயாளிகள் – பீதியில் மக்கள்!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (12:58 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடப்பது ஒரு பக்கம் இருக்க கொரோனா அறிகுறியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் தப்பியோடும் சம்பவம் ஒரு பக்கம் பீதியை கிளப்பியுள்ளது.

இப்படி தப்பியோடும் சம்பவம் கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியபோதே தொடங்கிவிட்டது. அப்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பி மதுரை செல்லும் ரயிலில் தப்பி சென்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடு முழுவதும் இதுபோன்று சிலர் தப்பி செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் அல்லது அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் கொரோனா பலி மதுரையில் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது கொரோனா சந்தேகம் உடைய வாலிபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கண்காணிப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் அதிகாரிகள் கவனிக்காத நேரத்தில் அந்த இளைஞர் தப்பியோடியிருக்கிறார். அவரை தேடி பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments