Publish Date: Wed, 11 May 2022 (08:00 IST)
Updated Date: Wed, 11 May 2022 (08:00 IST)
மதுரை பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரையில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மதுரையில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரங்கிற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து மதுரை போலீசார் இந்த வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்த கவிதை
இருப்பினும் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கைது செய்யப்படுவார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை