Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“நாளை முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்”..!

Madurai Airport

Senthil Velan

, திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:20 IST)
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மதுரை விமான நிலையம் காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதுடன், அதற்கேற்ற வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். 
 
இதன்படி தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று மதுரை விமான நிலைய ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீ மிதி விழாவில் தவறிவிழுந்த பெண் பக்தர் காயம்: சென்னை அருகே பரபரப்பு..!