கரைவேட்டி கட்டியிருந்தவர்கள் காவி வேட்டியை மாற்றி கட்டுகிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து மதுரை ஆதீனம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொண்டு அதன் பின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட திமுகவினர் அவ்வப்போது கடவுளுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதும் உண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு திடீரென பழனியில் முருகன் மாநாடு நடத்திய ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இது குறித்து மதுரை ஆதினத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அறநிலைத்துறை அமைச்சர்கள் எல்லாம் கரை வேட்டி கட்டி தான் பார்த்து இருப்போம், ஆனால் இப்போது அமைச்சர் சேகர் பாபு அவர்கள் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டி விட்டார். இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்தார்.
ஆன்மீக பணிகள் தமிழ்நாடு அரசு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அதையெல்லாம் கேட்க வேண்டாம், இத்துடன் என்னை விட்டு விடுங்கள் என்று மதுரை ஆதீனம் பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார் .அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது