Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை பிரச்சனை.. இந்து சமய அறநிலையத்துறை அளித்த தீர்வு..!

Advertiesment
காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை பிரச்சனை.. இந்து சமய அறநிலையத்துறை அளித்த தீர்வு..!

Siva

, செவ்வாய், 9 ஜூலை 2024 (13:38 IST)
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையிலான பிரச்னைக்கு குடவோலை முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு இந்து சமய அறநிலையத்துறை சுமூக தீர்வு கண்டுள்ளது. 
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவருக்கு முன்பாக பாடல் பாடுவதில்  யாருக்கு முதலிடம்? வடகலை ஐயங்கார் பாடுவதா, தென்கலை ஐயங்கார் பாடுவதா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.  
 
கடந்த 2018ஆம் ஆண்டு வடகலை, தென்கலை ஆகிய  இரு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நீதிமன்றம் செல்லும் அளவுக்கு அதிகரித்தது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை, தென்கலை பிரிவினர் தான் பிரபந்தம் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், வடகலை பிரிவினரும் தங்களுக்கும் பிரபந்தம் பாட  உரிமை வேண்டும் என்று கோரியதால் பிரச்சனை வெடித்தது.
 
இந்த நிலையில் தான் வடகலை, தென்கலை பிரிவினர் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க  இந்து சமய அறநிலையத்துறை குடவோலை முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பிரபந்தம் பாடுவதை உறுதி செய்துள்ளது. இதனால் இந்த பிரச்சனைக்கு தற்போது  சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடிப்பதா? உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி