கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறான் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்று எம்.பி ஆக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் அந்த தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை ஐகோர்ட், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை என்று கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.