Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ராஸ் காரன்... ஆட்டோ சவாரிக்கு பணத்துக்கு பதில் வெங்காயம் ! வைரல் வீடியோ

Advertiesment
மெட்ராஸ் காரன்... ஆட்டோ சவாரிக்கு பணத்துக்கு பதில் வெங்காயம் ! வைரல் வீடியோ
, வியாழன், 5 டிசம்பர் 2019 (17:12 IST)
பருவம் தவறி மழை பெய்துள்ளதால், வெங்காயம் உற்பத்தியாகும் மாஹாராஷ்டிர, ஜார்கண்டில் மாநிலங்களில் வெங்காயம் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது.
அதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
 
இந்நிலையில், டுவிட்டர் பக்கத்தில் மெட்ராஸ்காரன் என்ற ஒரு கணக்கில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
 
அதில், ஆட்டோவில் சவாரி செய்த பயணிகள், ஆட்டோகாரரிடம்  பணத்துக்குப் பதிலாக வெங்காயத்தைக் கொடுக்கிறார்கள். வெங்காய விலை அந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்த டிக்டாக் வீடியில் காலாய்த்துள்ளனர்.

அதேபோல் ஒரு பெண் ஒருவர், காதில் கம்மலுக்கு பதில், வெங்காயத்தை மாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும் தூத்துகுடியில் அதே மாசு: ஆர்.டி.ஐ தகவல்